யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் உள்ளிட்ட 22 பேர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவர்களை நிறைவு கூர்ந்து நினைவேந்தல் இடம்பெற்றது.
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதி, யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்கு சென்று திரும்பியபோது அருட்தந்தை ஜிம் பிறவுண் மற்றும் வின்சன் விமலதாஸ் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இதனை நினைவுகூரும் வகையில் அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து அமைதிப் பேரணி ஆரம்பமாகி, புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தை சென்றடைந்தது.
தொடர்ந்து ஆலயத்தில் விசேட வழிபாடுகள், நினைவஞ்சலி ஆகியன இடம்பெற்றன.
இந்த நிகழ்வில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கிறிஸ்தவ மதகுருக்கள் மற்றும் பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!