யாழ்ப்பாணம் சரவணை பகுதியிலுள்ள ஆலயத்தின் விக்கிரகத்தை உடைத்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்திலுள்ள விக்கிரகமே நேற்று(09) சேதப்படுத்தப்பட்டது.
கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில்
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!