இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து:40 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை – தங்காலை வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 40 பேரும் மாத்தறை மற்றும் பத்திகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலியிலிருந்து அம்பாறை நோக்கிச்சென்ற பேருந்தும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச்சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version