இலங்கை முழுவதும் தற்சமயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன், 2026 மே 28ஆம் திகதியிடப்பட்டு இலக்கம் 2490/06 இன் கீழ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுப் பாதுகாப்பு, மக்களின் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதற்கும், ஒட்டுமொத்த மக்களின் அன்றாட ஜீவனோபாயத்துக்கு அத்தியாவசியமாக விளங்கும் விநியோகங்கள் மற்றும் சேவைகளை எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி இந்த வர்த்தமானி மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க டொடரின் மதிப்பு மீண்டும் உயர்வு!
காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி மக்கள் ஏழாவது வெள்ளியாகவும் போராட்டம்!
கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளை முடக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!
சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக போராட்டம்!