கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் எஹெலியகொட நகரில் நேற்றிரவு(15) 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
எஹெலியகொட நகரில் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள், மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு கார்கள் என ஆறு வாகனங்களை மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 13 பேர் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!