கொழும்பு, கஹதுடுவ – தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த வயல்வெளிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (26) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
கஹதுடுவ – தியகம வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பேருந்து, அதே வீதியில் எதிரே வந்த மற்றுமொரு வாகனத்துக்கு இடமளிக்க முயன்றுள்ளது.
இதன்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!