கிளிநொச்சி – கரடிப்போக்கு ஏ9 வீதியில் அரச பேருந்தும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த சம்பவம் இன்று(28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்தும், கிளிநொச்சி யிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப. பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
விபத்தில் காயமடைந்த டிப்பர் சாரதியும்,அரச பேருந்து சாரதியும் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!
பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் தீக்கிரையானதில் 13 பணியாளர்கள் மீட்பு: மாலுமி மாயம்!