முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இந்திய சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று(18) மாலை இடம்பெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான
தொல்காப்பியன் திருமாவளவன்,

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, ஈழத்தைச் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து வன்னியரசு ,பாலாஜி, அர்ச்சுனா இராமநாதன், சண் மாஸ்டர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.


இந்திய அணியின் T20 அணித்தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டி இன்றிரவு!
இந்தியன் பிரீமியர் லீக் 13 ஆவது போட்டி இன்றிரவு!