செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 29ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.



அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 394 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 370என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார உள்ளிட்ட விசேட குழுவினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் செம்மணிக்கு வருகைதந்து புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட்டனர்.



இதேவேளை, நீதி அமைச்சர் செம்மணிக்கு வருகைதந்த தருணத்தில் காணாமற் போனவர்களின் உறவினர்கள் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!