யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி, அமைதிப் போராட்டம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி முன்றலில் இன்று(30) முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.மறைமாவட்டத்தின் நீதி, சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இந்த அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



அரியாலை புனித யூதாதேயு சொரூபம் முன்பாக ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஏ9 வீதியூடாக சிந்துபாத்தி மயான முன்றல் வரை போரணியாக சென்றனர்.



பின்னர் அங்கு மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!