கூரிய ஆயுதங்கள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தோடு கைது செய்யப்பட்ட “டில்லு” குழுவினரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 9 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (26) கைது செய்தனர்.
அதன்போது, காரினுள் கூரிய ஆயுதங்கள் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பணமும் காணப்பட்டுள்ளது. அவற்றைக் கைப்பற்றிய பொலிஸார் வாகனங்களை தடுத்து வைத்துள்ளனர்.
இந்தநிலையில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டவர்கள் “டில்லு” குழுவினர் எனவும், அந்தக் குழுவில் பொலிஸ் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் உள்ளதாகாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த குழுவினரை இன்று (27) யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பொலிஸார். முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது சந்தேக நபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் M.N.N. ஹுசைன் உத்தரவிட்டுள்ளார்.

மயிலிட்டியில் 23 ஆவது வாரமாகவும் காணி விடுவிப்பு போராட்டம்!
தெற்கு கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் கொழும்புக்கு அழைத்து வருகை!
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க கோரி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவுதி அரேபிய மன்னருக்கு கடிதம்!
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பத்திற்கு புதிய ‘வட்ஸ் அப்’ இலக்கம் அறிமுகம்!