யாழ்ப்பாண வாசியின் தொலைந்து போன பணப்பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம் பணத்துடன் தனது பணப் பையை தொலைத்து விட்டு தேடி அலைந்துள்ளார்.
பணி நிமித்தம் புத்தளத்திற்கு சென்ற யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
பணப் பையொன்று வீதியில் விழுந்து கிடைப்பதை அவதானித்து அதனை எடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த கைப்பைக்குள் இருந்த ஆவணங்களை கொண்டு அது யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதனை நேற்று(15) தொலைத்த பணப்பை உரிமையாளரிடம் கையளித்தார்.

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!