நவீன நரம்புத் தூண்டல் முறையான Transcranial Magnetic Stimulation (TMS) தொடர்பான கலந்துரையாடல், யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட CTRB மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த “நவீன நரம்புத் தூண்டல்” (TMS) வைத்திய நிபுணர் தாரிக் பெரேரா வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது TMS முறையின் அடிப்படை கோட்பாடுகள், மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் மனநலத் துறையில் அதன் எதிர்கால பங்கு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மனநல மருத்துவத் துறை ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!