நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எயார்பஸ் விவகாரத்தில் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடு செய்ததாக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version