எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீர்த்தன் சார்பாக உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த சொல்லிசைக் பாடகரை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதற்கான நடவடிக்கைகள் நாளைய தினம்(05) இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பாடல் சம்பந்தமான விடயம் பயங்கரவாத தடைச் சட்டத்துன்கீழ் கொண்டுவரக்கூடிய ஒன்றல்ல எனவும், இனங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்துவதாக சிலர் சாட்டுச் சொல்வதாகவும் ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!