இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இந்தியாவில் நாளை (25) நடைபெறவிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டுள்ளது.
இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது, அவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடுவதற்காக இந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், இந்தியத் தரப்பால் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை குறித்த காலப்பகுதியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தரப்பால் இலங்கைத் தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான புதிய திகதி இந்தியத் தரப்பினால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பத்திற்கு புதிய ‘வட்ஸ் அப்’ இலக்கம் அறிமுகம்!
நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!
புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!