இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடருக்கான இந்திய இந்தியா ‘A’ அணி இலங்கை வந்தடைந்துள்ளது.
இலங்கை ‘A’, இந்தியா ‘A’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘A’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘A அணித் தொடருக்காக, இந்திய குழாமானது திலக் வர்மா தலைமையில் களமிறங்கவுள்ளது.



இந்த அணியில் நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சிறந்த துடுப்படுத்தாட்ட வீரர் விருது வென்ற வைபவ் சூரியசன்ஷி இடம்பெற்றுள்ளார்.
இந்த முத்தரப்பு போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், ஜூன் 9ஆம் திகதி முதல் ஜூன் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இந்த ஒருநாள் முத்தரப்பு தொடர் முடிவடைந்ததும், ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான இரண்டு, நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் காலியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!
ICC ஒருநாள் தரவரிசையில் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்ட சுப்மன் கில்!
உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணிக்கு பிரமாண்ட வரவேற்பு!
FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!