சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முன்னாள் பொலிஸ் தமிழ் உத்தியோகத்தர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இருந்தும் சட்டவிரோத மணல் அகழ்வில் குறித்த நபர் தொடர்ந்தும் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்தநிலையில் பருத்தித்துறை கற்கோவளத்தில் அகழ்ந்த மண்ணை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (05) இடைமறித்தனர்.
பொலிஸாரின் சமிக்ஞையையும் பொருட்படுத்தாது சாரதி டிப்பரை ஓட்டுச் சென்றுள்ளார்.
அதனால் வாகனத்தை விரட்டிச் சென்ற பொலிஸார், சாவகச்சேரி நவற்குழி பகுதியில் வைத்து டிப்பரைக் கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்துள்ளனர்.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!