யாழ். நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையின் பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி ஒருவர், விகாரை வளாகத்தில் வடிகட்டிய குடிநீர் பெறுவதற்காக நேற்றைய தினம்(29) விகாரைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமியின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரிப் பொலிஸார், குறித்த பிக்குவை கைது செய்து நேற்றைய தினம் சாவகச்சேரி நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!