யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று(09) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர்.
கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது.
ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!