யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாளை முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்கு அவர் கலைப்பீட பீடாதிபதியாக செயற்படவுள்ளார்.
முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்திருந்தது.
இருந்தும், இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் காரணமாக, பீடாதிபதி தெரிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் திருத்தம், 2026 ஆண்டு 2ஆம் மாதத்துடன்
நடைமுறைக்கு வருவதாக மானியங்கள் ஆணைக்குழு அறிவிக்கப்பட்டதையடுத்து
கலைப் பீடாதிபதி தெரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அந்தநிலையில், பீடாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று(20) நடைபெற்றது.
இதன்போது பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா 27 மேலதிக வாக்குகளைப் பெற்று யாழ்.பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!