யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றினூடாக இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், கோரிக்கைகளையும், ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்திவரும் பல்கலைக்கழக மாணவர்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
மாறாக மாணவர்களின் உணர்வுகளை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முயல்வது அரசாங்கத்தின் இனவாதம் சார்ந்த அணுகுமுறையாகும்.
மாணவர்களின் உணர்வுகளை மதிக்காத அரசாங்கத்தின் இவ்வாறான விசாரணை நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!