வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்கக் கலந்துரையாடல்!

இராணுவத்தாலும், புற திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி 7 மாவட்ட பிரதிநிதிகள் கூட்டுக் கலந்துரையாடலில் இன்று (28) ஈடுபட்டனர்.

இந்தக் கலந்துரையாடல் யாழ்.அரியாலையிலுள்ள சர்வோதய மண்டபத்தில் இடம்பெற்றது.

வடக்கு–கிழக்கு மக்கள், தமது காணிகளை மீட்கும் நோக்கில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முக்கியமான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டப் பிரதிநிதிகளும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டப் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version