சுன்னாகம் – கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நேற்று முன்தினம் (12) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.


கல்லூரி முதல்வர் ரி. லோகராஜா தலைமையில் இடம்பெற்ற மெய்வல்லுநர் திறனாய்வில், கல்லூரிப் பழைய மாணவரும், சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுமான ம.கோணேஸ்வரன்,


கல்லூரிப் பழைய மாணவரும், வைத்திய கலாநிதியுமான கே. சிவகுமார், வலிகாமம் வலயக்கல்வி அலுவலக உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர், என்.கஜேந்திரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் பான்ட் வாத்திய இசையோடு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
விளையாட்டு நிகழ்வுகளை பிரதம விருந்தினர் ம.கோணேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
நிகழ்வுகளில் அஞ்சலோட்டம், கோலூன்றிப் பாய்தல், உயரம் பாய்தல், கயிறு இழுத்தல் போன்ற நிகழ்வுகள் சபையோரைக் கவர்ந்தன.

செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!