ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பு விடுத்துள்ளது.
இது வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைத் தீவிரப்படுத்தும் எனவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எரிசக்தி, உரம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும்.
இது குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ள மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும்.
உலகளாவிய கச்சா எண்ணெயில் 38 சதவீதமும், எல்பிஜி (LPG) எரிவாயுவில் 29 சதவீதமும் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 19 சதவீதமும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன.
உலகளவில் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே பயணிக்கின்றது.
இந்த நீரிணை ஊடாக அனுப்பப்படும் தயாரிப்புகளில் 84 சதவீதமானவை ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன.
எனவே, இதன் தாக்கம் ஆசியப் பிராந்தியத்திலேயே மிக அதிகமாக உணரப்படும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் தீக்கிரையானதில் 13 பணியாளர்கள் மீட்பு: மாலுமி மாயம்!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 103 பேர் மீட்பு: 140 பேரைக் காணவில்லை!
பிலிப்பைன்ஸ் தீ விபத்தில் பலியானவர் தொகை 35 ஆக உயர்வு!