ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த அணியாக, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடம்பிடித்துள்ளது.
சுமார் 16 ஆயிரத்து 706 கோடி அமெரிக்க டொலருக்கு அணியின் முழுமையான உரிமைகளை புதிய கூட்டணி கொள்வனவு செய்துள்ளது.
இந்தக் கூட்டணியில் அதித்யா பிர்லா குழுமம் தலைமையாக உள்ளது.
அதித்யா பிர்லா குழுமம், அணியின் தற்போதைய உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 100 வீதப் பங்குகளையும் பெற்றுள்ளது.
அதித்யா பிர்லா குழுமத்தோடு இணைந்து, டைம்ஸ் ஒஃப் இந்தியா, போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் நிறுவனங்கள் இந்த கொள்வனவில் பங்கெடுத்துள்ளன.
உரிமையாளர்கள் மாறியுள்ளதால், அணியின் பெயரும் மாற்றப்படுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!