அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி,இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுரேஷ் சாலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும், அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!