மத்திய கிழக்குப் போரை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் ஜூன்.19ம் திதியன்று சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் ஏரிக்கு அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ள பர்கன்ஸ்டாக் சொகுசு விடுதியில் இந்த ஒப்பந்தம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் மேற்கொண்ட பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளும், மேலும் சம்பந்தப்பட்ட இருநாடுகளும் இந்த இடத்தை முன்மொழிந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் ஈரான் தரப்பில் அந்நாட்டின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் கலந்துகொள்வார் எனவும் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.

ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!
ரஷ்யா – உக்ரைன் தாக்குதலில் 9 பேர் பலி
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு!