நெடுந்தீவுக்கான அரச படகுச் சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளன.
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில், குமுதினி திருத்தவேலை காரணமாக சேவையில் ஈடுபடவில்லை.


வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையேயான அரச படகு சேவைகள், முற்றாக செயலிழந்துள்ளன.


இந்தநிலையில் தனியார் படகு சேவையான, கரிகணன் மட்டுமே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளது.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!