காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம அகழ்வுகளால் பூநகரி பிரதேசம் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய பிரதேசங்களின் ஒன்றுபட்ட அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
பறிபோகும் எமது பிரதேசங்களின் இருப்பையும், மக்களின் வாழ்வையும் பாதுகாக்க எதிர்வரும் 28 ஆம் திகதி வேரவில் பிரதேச வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைப்பு அறிவித்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அந்த அமைப்பு இந்த அறிவித்தலை விடுத்தது.
தேசிய அபிவிருத்தி என்ற பெயரில் எமது பகுதியில் காற்றாலை மற்றும் கனிம அகழ்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கிராஞ்சி, பொன்னாவெளி, பாலாவி போன்ற எமது பிரதேசங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படவுள்ளன.
இங்கு 34 காற்றாலை கம்பங்கள் நாட்டப்படவிருக்கம் நிலையில், 14 கம்பங்கள் மக்களின் தொழிலிடங்களில் அமையவுள்ளன.
இந்த பகுதியை கைவிட்டு விட்டு ஏனைய இடங்களில் மேற்கொள்ளுமாறு கோரிவருகின்றோம்” என கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய பிரதேசங்களின் ஒன்றுபட்ட அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்க டொடரின் மதிப்பு மீண்டும் உயர்வு!
காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி மக்கள் ஏழாவது வெள்ளியாகவும் போராட்டம்!
கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளை முடக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!
சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக போராட்டம்!