மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு யாழில்!

ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் மற்றும் மக்கள் சக்தி கூட்டமைப்பு ஆகியன இணைத்து நடாத்திய மக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று (27) இடம்பெற்றது.

“அரசாங்கத்திற்கு ஆண்டு இரண்டு, மக்கள் வாழ்வு நலமா?” எனும் தொனிப்பொருளில் இந்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் நிர்மால் ரஞ்சித் தேவசிரி, சோமசுந்தரம் தேவராஜா, விதர்சன கன்னங்கர, சாமுவேல் தங்கராசா, நந்தன வீரரத்ன , சிறிதரன் திருநாவுக்கரசு, ஜோர்ஜ் அன்ரனி, ஆகியோர் இணைந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன்போது மக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டு பதில்கள் வழங்கப்பட்டன.

மேலும், தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றியமை தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version