2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுடமிருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பங்களைக் கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய, இன்று (24) முதல் எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை இணையவழியில் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என
பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரிகள் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்களுக்குச் பிரவேசித்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தாமே நேரடியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்பதால், உரிய காலத்திற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய சட்டமா அதிபராக டாட் பிளான்ச் நியமனம்!
மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!