உலகம்
Trending

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்திய தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதனையடுத்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைத்து
உதயநிதி ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினின் கைது செய்வதை தடை விதிக்க கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் இன்று(04) பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, “முதல்வர் குறித்தோ எந்த திரைத்துறையினர் குறித்தோ அவதூறு கருத்துகளை தெரிவிக்கவில்லை எனவும், பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசப்படவில்லை.

நாளை சட்டப்பேரவை கூடும் நிலையில், திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என அவர் மன்றில் தெரிவித்தார்.

தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், ”உதயநிதி ஸ்டாலினை தடுப்பில் வைக்கும் எண்ணம் இல்லை எனவும், விசாரணை நிறைவடைந்ததும் விடுவிக்கப்படுவார்” எனவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இன்று இரவுக்குள் விசாரணையை நிறைவு செய்து உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும், பொலிஸாரின் விசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button