விளையாட்டு
Trending

பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி

இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, 2026 கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெறும் சிங்க்பீல்ட் கிண்ணம் தொடரின் 8ஆவது சுற்றில், பிரான்ஸ் வீரர் மேக்சிம் வச்சியர்-லகிராவை 27 நகர்வுகளில் வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியுடன் 8 சுற்றுகளில் 5 புள்ளிகளைப் பெற்று, அமெரிக்க வீரர் வெஸ்லி சோவுடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும், நேரலை கிளாசிக்கல் செஸ் தரவரிசையில் இந்தியாவின் முதலிடத்தையும், உலகின் 8ஆவது இடத்தையும் பிரக்ஞானந்தா பிடித்துள்ளார்.

தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னதாகவே 2026 கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கான தனது இடத்தையும் பிரக்ஞானந்தா உறுதி செய்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button