
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 தொடரில், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மழை காரணமாக நேற்று கைவிடப்பட்டது.
ஸ்கொட்லாந்தின் டண்டீ நகரில் உள்ள ஃபோர்தில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த இந்தப் போட்டியில், தொடர்ந்து பெய்த மழையால் ஒரு பந்துகூட வீச முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, நடுவர்கள் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.
போட்டி நடைபெறாததால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி, ஐசிசி உலகக் கோப்பை லீக் 2 தொடரின் 123ஆவது ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us



