இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தும் எடுத்துச் செல்பவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே என்கிறார் கஜேந்திரன்!

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அது விடப்பட்ட இடத்திலிருந்து கொண்டு செல்லும் ஒரே தலைவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு யாழ்.நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் நேற்று(08) பிற்பகலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்களது விடுதலைப் போராட்டம் பூகோள ஆதிக்கப் போட்டி மற்றும் வல்லரசுகளின் சுயநல போக்குக் காரணமாக மௌனிக்கப்பட்டதெனவும் அவர் கூறினார்.

ஆனாலும், தமிழர் போராட்டமானது அடுத்த தலை முறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிறைவேற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஏக்கிய ராச்சிய என்ற ஒற்றை ஆட்சித் தீர்வை ஏற்றுக் கொண்டால் அது தமிழர்களுக்கு சாவுமணி அடிப்பதாகவே அமையும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை தமிழர்கள், ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்கான சமஷ்டி தீர்வை எட்டுவதற்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button