
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட சட்டத்தரணியான டாட் பிளான்ச், அந்நாட்டின் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க செனட் சபையில் நேற்று (08) அதிகாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 50க்கு 49 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் இவரது நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னாள் சட்டமா அதிபர் பாம் பாண்டி கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொட் பிளான்ச் இடைக்காலச் சட்டமா அதிபராகப் பணியாற்றி வந்துள்ளார்.
தற்போது செனட் சபையின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அவர் அமெரிக்க நீதித் திணைக்களத்தின் நிரந்தரத் தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.

Follow Us



