இலங்கை
Trending

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் விபத்து: 4 வாகனங்கள் சேதம்!

நுவரெலியா பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகே நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அதிக சுமைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்றின் தடையாழி (Brake) ஆபத்தான வளைவுப் பகுதியில் திடீரென செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுடன் முதலில் மோதியதுடன், தொடர்ந்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் ஜீப் வண்டியுடனும் மோதியுள்ளது.

விபத்தில் நான்கு வாகனங்களும் சேதமடைந்துள்ள போதிலும், அவற்றில் பயணித்தவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button