அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க கோரி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவுதி அரேபிய மன்னருக்கு கடிதம்!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவூத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள இந்தக் கடிதத்தில், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உள்ளிட்டோர் அனோஜனுக்கு நிவாரணம் வழங்குமாறு அந்தக் கடிகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், அவரது தண்டனையை குறைக்க அல்லது அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்யுமாறும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அனோஜன் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளி எனவும், இலங்கையிலுள்ள அவரது குடும்பம் அவரது வருமானத்தையே நம்பி வாழ்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.




