
“பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்கள்” தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் தலைமையகம் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.


இதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை 071 859 5950 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு செய்தியாக அனுப்பி, பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த புதிய இலக்கம் நேற்று (23) முதல் செயற்பாட்டிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



