உலகம்
Trending

அமெரிக்கா தடைவிதித்தஊடக நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகைக்கான அணுகலை வழங்க நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்திருந்த,
மூன்று ஊடக நிறுவனங்களின் வெள்ளை மாளிகைக்கான அணுகலை மீண்டும் வழங்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடக நிறுவனங்களுக்கு கடந்த மாதம் 18 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தடை விதித்திருந்தார்.

அதனை எதிர்த்து CNN, MS NOW மற்றும் Politico ஆகிய மூன்று ஊடகங்க நிறுவனங்களும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.

அந்தநிலையில், அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்திற்கான மாவட்ட நீதிபதி திமொத்தி கெல்லி பிறப்பித்துள்ள தற்காலிக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் குறித்த மூன்று ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கான ஊடக அனுமதிச் சீட்டுகளை உடனடியாக மீள வழங்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button