இலங்கை
Trending

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!

இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 20 கிலோகிராம் ‘ஹஷிஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற போது இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹஷிஷ் போதைப்பொருளின் மதிப்பு 201.89 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஓவியராகப் பணிபுரியும் 27 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர், கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து போதைப் பொருளோடு கத்தாரின் டோஹாவிற்குப் பயணம் செய்துள்ளார்.

அங்கிருந்து அதிகாலை 2:30 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை சுங்க அதிகரிகள் பயணப் பைகளைச் சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் மற்றும் 117 கிராம் பழுப்பு நிற ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button