இலங்கை
Trending

மயிலிட்டியில் 23 ஆவது வாரமாகவும் காணி விடுவிப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் மயிலிட்டியில் இடம்பெற்றுவரும் காணி விடுவிப்பு போராட்டம் 23 ஆவது வாரமாக இன்றும் (25) இடம்பெற்றது.

இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்ககோரி காணி உரிமையாளர்கள் பல தரப்பினரிடமும் கோரிக்கைகள் முன்வைத்து வந்தனர்.

அதன்போதும் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகள் தோறும் காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய தினமும் காணி உரிமையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக ஜனாதிபதி தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button