விளையாட்டு
Trending

சர்வதேச போட்டிகளிலிலிந்து ஓய்வுபெறவுள்ள மெஸ்ஸி,தனது இறுதிப் போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளார்!

தனது சர்வதேச இறுதிப் போட்டிக்கான விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்புறவுப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி புவனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மொனுமென்டல் (Estadio Monumental) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியே அர்ஜென்டினா தேசிய அணிக்காக மெஸ்ஸி விளையாடும் கடைசி போட்டியாக, அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மெஸ்ஸி தனது சமூக வலைத்தளப் பதிவின் மூலம் சிறப்பு ஜெர்சியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

அர்ஜென்டினாவின் பாரம்பரிய நிறங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த ஜெர்சியில், மெஸ்ஸியின் பெயரும் 10ஆம் இலக்கமும் தங்க நிறத்தில் இடம்பெற்றுள்ளதோடு பின்புறத்தில் அர்ஜென்டினாவின் அடையாளமான ‘மே மாத சூரியன்’ இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button