இலங்கை
Trending

டெங்கு பரவலால் இதுவரை 47 பேர் பலி!

நாட்டில் டெங்கு தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 67 ஆயிரத்து 174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், ஜூலை மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 10 ஆயிரத்து 685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும் கடந்த 10 ஆம் திகதி மட்டும் 1,110 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button