
தமிழ்நாட்டின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரையில் இன்று (28) தொடங்கி வைத்தார்.
மதுரை அரச ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சார்பாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படும் எனத் தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
அதற்கமைய 2026-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் திகதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்காகத் தமிழக அரசு ஆண்டுக்கு 755.83 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்காக முதல்கட்டமாக ஒரு இலட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us



