இந்தியாஉலகம்
Trending

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா, சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையிலுள்ள இல்லத்தில் இன்று (10) அதிகாலை காலமானார்.

நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button