
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது.
இதன் முதலாவது போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 23 முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 5 ஆவது இடத்திலும், இலங்கை 6 ஆவது இடத்திலும் உள்ளதால், இரு அணிகளுக்கும் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மிகவும் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us



