
பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, பூட்டானின் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் அரசரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது பூட்டானின் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்தக்கூடிய துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.


பூட்டானின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, இலங்கை கொண்டுள்ள அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்வதிலுள்ள விருப்பத்தைப் பூட்டான் அரசர் இதன்போது வெளிப்படுத்தினார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பூட்டானுக்குள் முதலீட்டு வலயமொன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

Follow Us



