இலங்கை
Trending

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தணியும் வரை எரிபொருள் மானியம் தொடரும் – மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு!

மத்திய கிழக்கு பிராந்திய போர்ச் சூழல் நெருக்கடிகள் குறையும் வரை, தற்போதைய எரிபொருள் மானிய நடைமுறையை நிறுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என மின்சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தில் ஏற்படும் நட்டத்தை அரசாங்கத்தால் காலவரையறையின்றி பொறுப்பேற்க முடியாது என அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி கூறியது மானியத்தைக் காலவரையறையின்றி தொடர முடியாது என்பதே தவிர,தற்போதைய நெருக்கடி நிலை தணிந்த பின்னரே இந்த மானியம் நீக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போதைய மானிய ஏற்பாட்டின் கீழ் அரசாங்கம், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாயையும் மானியமாக வழங்கி வருகின்றது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button